திருச்செந்தூர், கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.!


திருச்செந்தூர், கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.!
x

திருச்செந்தூர், கன்னியாகுமரியில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கி கானப்பட்டது.

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது. அவர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், இன்று கோவில் கடலானது சுமார் 200 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தது. மேலும் கடலில் அலைகள் இல்லாமல் குளம் போல் காட்சியளித்தது. இதனால் பாறை மீது ஏறி நின்று பக்தர்கள் செல்பி எடுத்து வருகின்றனர்.

அதேபோல உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் இன்று காலை கடல்நீர் உள்வாங்கி கானப்பட்டது. இதனால், இதனால் குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் காலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் போனது.

இதனை தொடர்ந்து சில மணிநேரத்தில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலை திரும்புவதும் வழக்கம். ஆனால் இன்று திடீரென கடல் உள்வாங்கியது கோவிலுக்கு வந்த மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story