கந்தசஷ்டி நிறைவு விழாவையொட்டி திருத்தணி, சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்


கந்தசஷ்டி நிறைவு விழாவையொட்டி திருத்தணி, சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்
x

கந்தசஷ்டி நிறைவு விழாவையொட்டி திருத்தணி மற்றும் சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவில்

திருவள்ளூர் மாவட்டம் முருகனின் அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி 6 நாட்களாக கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில், தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டும், உற்சவர் சண்முகருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று மாலை புஷ்பாஞ்சலி நடைபெற்றது. விழாவில் இறுதி நாளான நேற்று காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் கல்யாண உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

கந்தசஷ்டி விழாவில் இறுதி நாளன நேற்று முருக பெருமானை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர்.

சிறுவாபுரியில்

இதேபோல திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது.

இந்த நிலையில், நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர், சாமி முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story