ராமாபுரத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்பு


ராமாபுரத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்பு
x

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் இஸ்லாமியர்கள் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து நோன்பு திறந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:-

தமிழக சட்டமன்றத்தில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இது தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.ஆன்லைன் சூதாட்டம் பல இளைஞர்களின் உயிர்களை பறித்திருக்கிறது. தமிழக முதல்-அமைச்சருக்கும், இந்த சட்ட மசோதாவை 2-வது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

கவர்னர் ஆர்.எஸ்.எஸ்.தொண்டரைபோல் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அரசியல் பேசுகிறார். ஆளுங்கட்சி எப்படி செயல்படவேண்டுமோ, சட்ட வரையறைப்படி, அரசு மரபுகளின்படி பிரதமரை வரவேற்பது என்ற அடிப்படையில் தி.மு.க. ஆளுங்கட்சி என்ற முறையில் இயங்கி வருகிறது. பிரதமர் மோடியை வரவேற்றதனால் தி.மு.க. தனது நிலைப்பாட்டில் இருந்து விலகிவிட்டது என சந்தேகப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story