திருவள்ளூர்: கோயில் திருவிழாவில் பட்டாசு விபத்து


திருவள்ளூர்: கோயில் திருவிழாவில் பட்டாசு விபத்து
x
தினத்தந்தி 22 Oct 2023 3:25 AM GMT (Updated: 22 Oct 2023 4:03 AM GMT)

திருவள்ளுரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

திருவள்ளுர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் ராமரெட்டிபாளையம் அருகே பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இங்கு நேற்று திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவின் போது சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கைகளை வெடித்தப்படியே சென்றனர். இந்நிலையில் திடீரென வான வேடிக்கையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசு மூலம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயானது வேகமாக பரவியது. பெரும் போராட்டத்துக்கு பின்னர் தீயானது அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த பட்டாசு விபத்து குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story