மிரட்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி... சென்னையில் புயல் எச்சரிக்கை கூண்டு..!


மிரட்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி... சென்னையில் புயல் எச்சரிக்கை கூண்டு..!
x

கோப்புப்படம் 

சென்னை உட்பட 8 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை,

வடக்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் பாலசூருக்கு அருகே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க கூடும்.

அதன்பின்னர், ஜார்கண்ட் நோக்கி சென்று வலுவிழக்கும். இதன் காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Next Story