நிலத்தகராறில் அண்ணன், தம்பிக்கு கொலை மிரட்டல் - பேரூராட்சி துணைத் தலைவருக்கு போலீசார் வலைவீச்சு


நிலத்தகராறில் அண்ணன், தம்பிக்கு கொலை மிரட்டல் - பேரூராட்சி துணைத் தலைவருக்கு போலீசார் வலைவீச்சு
x

திருவள்ளூரில் நிலத்தகராறில் அண்ணன், தம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த பேரூராட்சி துணைத்தலைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை தோப்புத் தெருவில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 50). இவர் தனது தம்பி சிவா (35). இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 21-ந் தேதி தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அதே தெருவில் வசித்து வருபவர் ராமன் என்கிற ராமகிருஷ்ணன். பொதட்டூர்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் நடராஜனின் நிலத்தில் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டு அண்ணன், தம்பி 2 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கைகளால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபற்றி நடராஜன் பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பேரூராட்சி துணைத் தலைவரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story