மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பிப்ரவரி 15-ம் தேதி வரை அவகாசம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு


மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பிப்ரவரி 15-ம் தேதி வரை அவகாசம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
x

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பிப்ரவரி 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வந்தது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

இதுவரை 2.42 கோடி மின் நுகர்வோர், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்றும் பொதுமக்கள் கடைசிநாள் வரை காத்திருக்காமல் உடனடியாக மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


Next Story