காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர திருவிழா நிறைவு


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர திருவிழா நிறைவு
x

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர திருவிழா நிறைவடைந்தது.

காஞ்சிபுரம்

திருப்பவித்ர திருவிழா

புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சன்னதிகளில் உள்ள மூலவர் விக்கிரகங்களுக்கும், உற்சவர் சிலைகளுக்கும் ஆண்டு தோறும் தோஷங்களை நிவர்த்தி செய்யும் வகையில் நடைபெறும் திருப்பவித்ர திருவிழா கடந்த 31-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.

திருப்பவித்திர திருவிழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதிஉலா வந்த வரதராஜ பெருமாளுக்கு நாள் தோறும் சிறப்பு திருமஞ்சனங்கள் நடத்தப்பட்டு மாலை வேளைகளில் திருப்பவித்ர நூல் மாலைகள், மலர் மாலைகள், உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது. கோவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஒலிக்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சாமி தரிசனம்

நிறைவு நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பவித்ர நூல்மாலைகள் அணிவித்து, மேளதாளங்கள் முழங்க சாமி கோவிலில் இருந்து புறப்பட்டு சன்னதி வீதி மாட வீதிகள் வழியாக வேத பாராயணம் கோஷ்டினர் பாடி வர வீதி உலா உற்சவம் நடைபெற்றது.

வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story