திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது


திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது
x

ஆசிரியர் அழகு சுந்தரம், சமூக வலைதளம் மூலம் மாணவியுடன் பேசுவது பெற்றோருக்கு தெரிய வந்ததும், மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

திருப்பூர்

திருப்பூர் மங்கலம் சாலை கே.வி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் அழகு சுந்தரம் (வயது 29). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் ஆசிரியர் அழகு சுந்தரத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் பள்ளியை விட்டு வெளியேறிய ஆசிரியர் அழகு சுந்தரம் தொடர்ந்து அந்த மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளார்.

மேலும் அவர், அந்த மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இருவரும் சமூகவலைதளம் மூலம் பேசிக்கொண்டிருப்பது மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே இதுகுறித்து திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார், அழகு சுந்தரத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் அழகு சுந்தரத்தை கைது செய்தனர்.


Next Story