உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது: அண்ணாமலை


உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது: அண்ணாமலை
x

பாரதத்தின் கலாசாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

மாண்புமிகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது.

பாரதத்தின் கலாசாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story