மாதவரம் அருகே பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
மாதவரம் அருகே பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
சென்னை
சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், மாதவரத்தை அடுத்த மாத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட பொருளாளர் எம்.ஏ.குமரன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு 350 பேருக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையும், 700 பேருக்கு தண்ணீர் கேன்கள் மற்றும் 5 கிலோ அரிசியும், 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மாதாந்திர மருந்துகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் சென்னை கோட்ட பொறுப்பாளர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் மனோகர், மாவட்ட பார்வையாளர் அம்பத்தூர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் எம்.பாஸ்கரன், சென்னை சிவா, சசிதரன், லதா ருக்மாங்கதன், மாதவரம் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story