முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பொள்ளாச்சியில் திமுக பொதுக்கூட்டம் தொடக்கம்
பொள்ளாச்சியில் திமுக பொதுக்கூட்டம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோவை,
கோவை ஈச்சனாரியில் தனியார் கல்லூரிக்கு எதிரே உள்ள மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் ரூ.272 கோடியில் முடிவுற்ற 229 பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.663 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினர்.
இதனை தொடர்ந்து கோவை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்று வரும் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி சென்றடைந்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைய உள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.