கருப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டம்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகி கைது


கருப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டம்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகி கைது
x
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் குமார்

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை:

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து பாம்பன் கடலில் இறங்கி கருப்பு கொடியுடன் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் இன்று தமிழகம் வரும்போது கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் அறிவித்திருந்தார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை போலீசார் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.


Next Story