டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி: விசாரணை குழு அமைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர் .
சென்னை,
2011ல் குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுப்பணிக்கான தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர் .
ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும். விசாரணைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தேர்வாணையத்துக்கு அறிவுறுத்திய சென்னை ஐகோர்ட்டு தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.