தமிழகத்தில் நாளை டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு - ஏற்பாடுகள் தீவிரம்


தமிழகத்தில் நாளை டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு - ஏற்பாடுகள் தீவிரம்
x

தமிழகத்தில் நாளை நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

சென்னை,

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10-ம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு ஜூலை 24-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை(நாளை) தேர்வு நடைபெறுகிறது. இதற்காக டி.என்.பி.எஸ்.சி. விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதில் ஆண்கள் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர், பெண்கள் 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7 ஆயிரத்து 689 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன.

சென்னையில் 503 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். இந்த தேர்வில் மொத்தம் 534 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணிகள் ஈடுபட உள்ளனர்.


Next Story