தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம்


தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம்
x

தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருந்து வருபவர் ஜெயச்சந்திர ராஜா. இவரை இருமுறை கொலை செய்ய முயற்கள் நடந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவரை திட்டமிட்டே மர்மநபர்கள் மீண்டும் மீண்டும் தாக்கி வருவதை கண்டித்தும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவதாக பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.


Next Story