வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
வால்பாறை தாலுகாவில் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story