சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்


சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
x

சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை அதிகரித்துள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று திடீரென பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. ஆனால் ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் இறங்கவில்லை.

நேற்று கிராம் 5,020-க்கும் பவுன் ரூ.40,160-க்கும் விற்பனை ஆனது. இன்று இது கிராம் ரூ.5,016-ஆகவும் பவுன் ரூ.40,128 ஆகவும் குறைந்துள்ளது. இன்று கிராம் ரூ.4-ம் பவுன் ரூ.32-ம் குறைந்துள்ளது. ஆனால் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று கிராம் 71 ரூபாய்க்கும், கிலோ 71 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இன்று கிராம் ரூ.71.60-க்கும் கிலோ ரூ.71 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆகிறது. ஒரே நாளில் கிராம் 60 காசுகளும் கிலோ ரூ.600-ம் உயர்ந்துள்ளது.


Next Story