கனமழை எச்சரிக்கை.. 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு


கனமழை எச்சரிக்கை.. 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2023 3:04 PM IST (Updated: 24 Nov 2023 3:28 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படாது என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

இதனால், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.


Next Story