பல் பிடுங்கிய விவகாரம்: நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்..!
பல் பிடுங்கிய விவகாரத்தில் நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பல் பிடுங்கிய விவகாரத்தில் நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சுத்தமல்லி ஆகிய காவல்நிலையங்களில் பணிபுரிந்துவந்த போலீசார் 24 பேரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி சிலம்பரசன் ஆணை பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் சிக்கி காத்திருப்பு பட்டியலில் இருந்த ஆயுதப்படை காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story