சென்னையில் ரெயில் எஞ்ஜின், பெட்டிகள் தடம் புரண்டு விபத்து


சென்னையில் ரெயில் எஞ்ஜின், பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
x
தினத்தந்தி 15 Feb 2024 8:10 AM IST (Updated: 15 Feb 2024 8:17 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, தடம் புரண்ட ரெயில் எஞ்ஜினை தண்டவாளத்தில் நிறுத்தினர்.

சென்னை,

சென்னை செண்ட்ரலில் சரக்கு ரெயில் ஒன்று யார்டுக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள், விரைந்து வந்து தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாலை 4 மணிக்குள் ஊழியர்கள் ரெயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிறுத்தினர். பின்னர் அந்த ரெயில் யார்டுக்கு சென்றது.

இதேபோல மற்றொரு சம்பவத்தில், அதே பகுதியில் ரெயில் எஞ்ஜின் ஒன்று யார்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டது. உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட ரெயில் எஞ்ஜினை தண்டவாளத்தில் நிறுத்தினர்.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனுக்குடன் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று சரிசெய்யப்பட்டதால் போக்குவரத்திற்கு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Next Story