சென்னை சென்ட்ரலில் இருந்து போடிக்கு பிப்.19-ந் தேதி முதல் ரெயில் சேவை


சென்னை சென்ட்ரலில் இருந்து போடிக்கு பிப்.19-ந் தேதி முதல் ரெயில் சேவை
x

சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை செல்லும் ரெயில் போடி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை போடி வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் போடி ரெயில் பாதையில் 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீரமைப்பு பணிகள் நடந்தன. இப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அங்கு ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனை முடிவடைந்ததை தொடர்ந்து அந்த பாதையில் ரெயில் இயக்க அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதையடுத்து சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை செல்லும் ரெயில் போடி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பிப்ரவரி 19-ந்தேதி முதல் இந்த ரெயில் சேவை தொடங்கும் என இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 7.30 மணிக்கு இந்த ரெயில் புறப்படும். மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி மற்றும் தேனியில் இந்த ரெயில் நின்று செல்லும்.

இதுபோல மறுமார்க்கத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னைக்கு புறப்படும். இந்த ரெயில் சேவை மூலம் தென்மாவட்ட பயணிகள் பலன் பெறுவார்கள் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story