கூழாங்கற்கள் கடத்தல்; 2 பேர் கைது
கூழாங்கற்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் மோவூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வெள்ள மதகுபகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் கூழாங்கற்கள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து 2 லாரிகளை தாசில்தார் பறிமுதல் செய்து காட்டுமன்னார்கோவில் போலீ்ஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கூழாங்கற்களை லாரிகளில் கடத்தி வந்தது நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர்களான வேல்முருகன் (வயது 31), கோபாலகிருஷ்ணன் (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் கூழாங்கற்கள் கடத்தல் தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளரான விஸ்வநாதன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.