உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை


சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்

சென்னை,

நடிகரும், சேப்பாக் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46 வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையடுத்து சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில்,

கண்ணியமிகு பேச்சால் இனமான உணர்வூட்டி, கட்டுப்பாடு மிகு கழகத்தை இளைஞர்களைக் கொண்டு உருவாக்கிய பேரறிஞர் அண்ணா-ஆதிக்கத்திற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் ஓய்வறியாமல் உழைத்த சமூகநீதி போராளி முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடங்களில் என் பிறந்தநாளான இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story