உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கம் - 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்


உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கம் - 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
x

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எடப்படாத நிலையில் வாகனங்கள் பணம் செலுத்தாமல் சென்று வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணிபுரிந்த 28 ஊழியர்கள், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக, சுங்கச்சாவடியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு சார்பில் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் சுங்கச்சாவடியில் இரண்டாவது நாளாக வாகனங்கள் பணம் செலுத்தாமல் சென்று வருவதால், பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story