திருவள்ளூரில் 17 வயதுக்குட்பட்டோருக்கான சைக்கிள் போட்டி
திருவள்ளூரில் 17 வயதுக்குட்பட்டோருக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது.
சைக்கிள் போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 17 வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டிகள் நடைபெற்றன. இவர்களுக்கான தூரம் முறையே 20 கிலோமீட்டர் (பூண்டி பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடைதல் வேண்டும்).
பரிசுகள்
15 கிலோமீட்டர் (நெய்வேலி மின்வாரியம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடைதல் வேண்டும்) மேலும் 10 கிலோமீட்டர் (கிருஷ்ணா நதி கால்வாய் பாலம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடைதல் வேண்டும்). இந்த போட்டியை கூடுதல் கலெக்டர் டாக்டர். என்.ஓ.சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 333 மாணவர்கள், 237 மாணவிகள் கலந்துகொண்டார்கள். அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், ஆசிரியர் சங்க தலைவர் அருணன், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.