மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகை..!


மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகை..!
x

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலினை ராஜ்நாத் சிங் சந்திக்கிறார்.


Next Story