தமிழகம் முழுவதும் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்


தமிழகம் முழுவதும் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்
x

வைகாசி விசாக திருவிழா தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சென்னை,

வைகாசி விசாக திருவிழாவையொட்டி வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் நான்காம் படை வீடான சுவாமி மலை கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகமாக நடைபெற்றது. இதில் 108 சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற வைகாசி விசாக தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதேபோல் குளித்தலை நீலவேகப்பெருமாள் கோவிலிலும் வைகாசி விசாகத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


Next Story