வைகாசி விசாக திருவிழா: மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரெயில் இயக்கம்


வைகாசி விசாக திருவிழா: மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
x

வைகாசி விசாக திருவிழாவையொட்டி மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மதுரை,

பழனியில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக மதுரை- பழனி இடையே சிறப்பு ரெயில் இயக்க மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை- பழனி முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் வருகிற 12-ந் தேதி மதுரை ரெயில் நிலையத்திலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு பழனி ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து ஒரு சிறப்பு ரெயில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரெயில், இருமார்க்கங்களிலும் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில், 10 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 பார்சல் வேனுடன் இணைந்த இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.


Next Story