வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை இல்லை


வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை இல்லை
x
தினத்தந்தி 29 April 2024 3:13 PM IST (Updated: 29 April 2024 3:38 PM IST)
t-max-icont-min-icon

பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும்.

வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். இதற்கிடையில், தற்போது கோடை விடுமுறை தினம் என்பதால் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக நாளை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story