வெற்றி துரைசாமி மறைவு - ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்


வெற்றி துரைசாமி மறைவு - ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
x

வெற்றி துரைசாமியின் மறைவுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான அன்புச் சகோதரர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

மகனை இழந்து தவிக்கும் அன்புச் சகோதரர் துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகனின் இழப்பினைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அன்புச் சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அளிக்க எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story