பணி நேரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீருடையுடன் மது அருந்தும் வீடியோ வைரல்..!
வத்திராயிருப்பு அருகே பணி நேரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சீருடையுடன் மது அருந்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் வேலை நேரத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீருடையுடன் டாஸ்மாக் கடை பாரில் அமர்ந்து மது அருந்துகிறார். பின்னர் அவரின் கூட வந்த நபருக்கு தின்பண்டம் கொடுக்கின்ற வீடியோ வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மது அருந்திவிட்டு தகராறுகளில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கும், வாகனத்தில் மது அருந்தி செல்பவர்களை கண்காணித்து அதை தடுப்பதற்க்கும் போலீசார் பணியில் ஈடுபடும் நிலையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சீருடையுடன் மது அருந்துவது பொதுமக்களிடையே முகசூலிப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் ஊருக்கு மட்டும் தான் உபதேசம் சொல்வார்களா என்று பொதுமக்கள் இப்பகுதியில் பேசி வருகின்றனர். சீருடையுடன் மது அருந்தும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.