அதிகாலையே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு - பின்னணி என்ன?


அதிகாலையே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு - பின்னணி என்ன?
x

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது.

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி. வேலுமணி:

அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி விதிகளை மீறி அரசு நிறுவனத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

விஜயபாஸ்கர்;

அதேபோல், அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். இந்நிலையில், அதிமுக முன்னாள் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தனியார் மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விஜயபாஸ்கர் வீடு, தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தேசிய மருத்துவக்குழு விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு விஜயபாஸ்கர் சான்று தந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் வீடு மற்றும் தொடர்புடைய மொத்தம் 39 இடங்களில் அதிகாலை முதல் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே வேறு வழக்குகளில் சில முறை சோதனை நடந்துள்ல நிலையில் தற்போது மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story