விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்


தஞ்சையில், நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ படம் 2 தியேட்டர்களில் வெளியானதையடுத்து விஜய் பட பேனர்களுடன் ரசிகர்கள் வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். தியேட்டர் முன்பு அவர்கள் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

தஞ்சாவூர்

லியோ திரைப்படம்

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. தஞ்சையில் இந்த திரைப்படம் 2 தியேட்டர்களில் வெளியானது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் ஆகிய இடங்களில் 10 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

தஞ்சையில் நேற்று காலை 8.30 மணிக்கு திரைப்படம் வெளியானதை தொடரந்து காலை 6 மணிக்கே ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத;துடன் தியேட்டர் முன்பு குவிந்தனர்.விஜய் மக்கள் இயக்கத்தினர் தஞ்சை மானோஜிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி அங்கு இருந்து 4 சரக்கு வேன்களில் விஜய் பட பேனர்களை வைத்து ஊர்வலமாக வந்தனர். அதில் விஜய் படத்துக்கு மாலை அணிவித்து இருந்தனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஊர்வலமாக வந்த வாகனங்களில் பேண்டு இசை கலைஞர்கள் இசைத்தபடி வந்தனர். அந்த வாகனத்துடன் விஜய் ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் விஜய் கொடியுடனும் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலமாக படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு வந்து அங்கு விஜய் படத்தை வைத்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

மேலும் தியேட்டர் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்ததால் வண்ண கலர் காகிதங்களை நவீன எந்திரங்கள் மூலம் ரசிகர்கள் மீது தூவினர். நேற்று 5 காட்சிகள் திரையிடப்பட்டன.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மேலும் திரையங்கில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. தியேட்டர் வளாகத்தில் கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story