அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட கிராம மக்கள் தலைமை ஆசிரியர் மீது சரமாரியாக குற்றச்சாட்டு


அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட கிராம மக்கள் தலைமை ஆசிரியர் மீது சரமாரியாக குற்றச்சாட்டு
x

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட கிராம மக்கள் தலைமை ஆசிரியர் மீது சரமாரியாக குற்றச்சாட்டு சாட்டினர்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாமந்த வாடா காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1-வது வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 33 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டன. ஆனால் சாமந்தவாடா காலனியில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு கிராம மக்கள் பூட்டு போட்டதால் திறக்கப்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த பள்ளிப்பட்டு வட்டார தொடக்கக் கல்வி அலுவலர் கிரிஜா, மேற்பார்வையாளர் மோகனா ஆகியோருக்கு சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் பள்ளிக்கு ஏன்? பூட்டு போட்டீர்கள் என கிராம மக்களிடம் கேட்டனர். அதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியரின் நடவடிக்கை சரியில்லை என்றும், அவர் ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை என்றும் கிராம மக்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர். அவர்களை கல்வி அதிகாரிகள் சமாதானப்படுத்தினார்கள்.

இதையடுத்து பள்ளிக்கு போட்ட பூட்டை கிராம மக்கள் திறந்து விட்டனர். பள்ளிக்கு வெளியே காத்திருந்த மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story