சென்னை கோயம்பேடு அருகே உள்ள வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது.இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார் மோப்ப நாய்கள் மூலம் மாலில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் மாலில் சோதனை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே கடந்த மாதம் சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story