உலக அமைதிக்காக நடைபயணம்


உலக அமைதிக்காக நடைபயணம்
x

உலக அமைதிக்காக நடைபயணம் நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

உலக அமைதிக்காக வெளிநாட்டில் இருந்து புத்த துறவிகள் நடைபயணமாக 12 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தனர். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கிருஷ்ணன் கோவில் வந்தனர். அங்கு வி.பி.எம்.எம். கல்லூரிகளின் சார்பில் புத்த துறவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு அவர்கள் மாணவ-மாணவிகளிடம் கூறுகையில், மாணவ, மாணவிகள் உலக அமைதிக்காக பாடுபட வேண்டும். உலகம் அமைதியாக இருக்க ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும் என கூறினர். இதில் கல்லூரி சேர்மன் வி.பி. எம். சங்கர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story