பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு


பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
x

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர், பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

வடகிழக்கு பருவ மழை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர்வரத்து அதிகமாகியதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்தது. அணையின் பாதுகாப்பை கருதி கடந்த 9-ந் தேதி பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. 12-ந் தேதி பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று செம்பரபாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

பூண்டி ஏரியில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரியில் 2.839 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,280 கனஅடி ஆக வந்துக்கொண்டு இருந்தது.


Next Story