"சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" - அமைச்சர் உதயநிதி


சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - அமைச்சர் உதயநிதி
x

சனாதன விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்ததும் உரிய விளக்கம் அளிக்கப்படுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்றது.

அப்போது, சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழக அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது;

"சனாதன விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பற்றி ஊடகங்களில் பார்த்தேன். சுப்ரீம் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் இன்னும் வரவில்லை. நோட்டீஸ் வந்தவுடன் அது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும். சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story