"கவர்னர் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.." -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவீட்!


கவர்னர் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.. -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவீட்!
x
தினத்தந்தி 7 April 2023 1:55 AM GMT (Updated: 7 April 2023 2:13 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலை குறித்து கவர்னர் பேசியதை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

ஸ்டெர்லைட் ஆலை குறித்து கவர்னர் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவீட்டரில் கூறியதாவது;

ஸ்டெர்லைட் உயிர்த்தியாகங்களை கொச்சைப்படுத்தியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதா நிராகரிக்கப்பட்டது என்றும் அரசியலமைப்புக்கு புறம்பாக ஆளுநர் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மாநில நலனுக்கு எதிரான இந்த ஆணவப்போக்கை மக்கள் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் தனது டுவீட்டரில் பதிவிட்டு உள்ளார்.


Next Story