பரந்தூரில் விமான நிலையம் அமைவதை வரவேற்கிறோம் - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி


பரந்தூரில் விமான நிலையம் அமைவதை வரவேற்கிறோம் - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி
x

பரந்தூரில் விமான நிலையம் அமைவதை வரவேற்கிறோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சென்னை

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெறும் ஒற்றுமை பாதயாத்திரை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் அழகிரி கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதனை வரவேற்கிறோம். இந்த முறை இங்கே விமான நிலையம் அமையவில்லை என்றால் இனிவரும் காலங்களில் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story