நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு வாரத்தில் அறிவிப்போம் - அன்புமணி ராமதாஸ் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு வாரத்தில் அறிவிப்போம் - அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு வாரத்தில் அறிவிப்போம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

வடலூர்,

வடலூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள். வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு பா.ம.க. கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. ஆனால் வடலூரில் ரூ.100 கோடி செலவில் அமையவிற்கும் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு பா.ம.க. கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

வடலூருக்குப் பதில் சென்னையில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைத்தால் உலகம் முழுவதும் வள்ளலார் புகழ் பரவும். வள்ளலாரின் கனவுப்படி வடலூரில் நிலம் அப்படியே இருக்க வேண்டும்; வடலூர் பெருவெளியில் எந்தவொரு கட்டுமானங்களும் இல்லாமல் இருக்க வேண்டும். வள்ளலார் வாழ்ந்த மண்ணை தமிழ்நாடு அரசு எந்த வகையிலும் சிதைக்கக் கூடாது.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பு ஓரிரு வாரத்தில் வெளியாகும். கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். கூட்டணி தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை, வதந்திகள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story