நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம்: ஓ.பன்னீர் செல்வம் அதிரடி அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம்: ஓ.பன்னீர் செல்வம் அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2023 5:31 PM GMT (Updated: 20 Aug 2023 5:40 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை,

மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெறும் நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், தன்னால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்தியிருந்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் மாநாட்டை நடத்தினார். இதேபோன்று, மேற்கு மண்டலத்தில் தனது பலத்தை நிரூபிக்கும் நோக்கில் அடுத்த மாநாட்டை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இன்றைய கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் அந்த நிகழ்வில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், செப்.3ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், " இ.பி.எஸ் பொறுப்பேற்ற பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி தான். நாடாளுமன்ற தேர்தலுக்கு விரைவில் நாம் தயாராக வேண்டும் . உண்மையான உறுப்பினர்களை நாம் சேர்க்கப்போவது உறுதி . நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளரை கண்டிப்பாக நிறுத்த உள்ளோம்" என்று அவர் கூறினார்.
Next Story