கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் விபரம்


கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் விபரம்
x
தினத்தந்தி 16 Nov 2023 8:23 AM GMT (Updated: 16 Nov 2023 8:25 AM GMT)

பல ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

சென்னை,

தமிழக கவர்னராக இருக்கும் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள தமிழக அரசு, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கை கடந்த வாரம் விசாரித்த சுப்ரீம் கோர்ட், கவர்னரின் செயல்பாட்டை விமர்சித்தது.

இந்த நிலையில், பல ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் பின்வருமாறு;-

1) சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா

2) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா

3) தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா

4) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

5) தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா

6) தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

7) தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

8) தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா

9) அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

10) தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா ஆகியவை கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.


Next Story