தி.மு.க. செய்தால் திராவிட மாடல், அ.தி.மு.க. செய்தால் அடிமைத்தனம் என்பதா? முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டி


தி.மு.க. செய்தால் திராவிட மாடல், அ.தி.மு.க. செய்தால் அடிமைத்தனம் என்பதா? முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டி
x

ஹலோ எப்.எம். ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சியில் இன்றுகாலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேட்டி அளிக்கிறார்.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி பா.ஜ.க.தான் என்று அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வருவது குறித்தான கேள்விக்கு பதில் அளிக்கையில், 'ஒவ்வொரு கட்சிக்கும் வளர வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுப்பது இயல்பான ஒன்றுதான்' என்றும் 'ஆனால் கள நிலவரத்தை பொறுத்தவரை சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அ.தி.மு.க.தான் பிரதான எதிர்கட்சியாக செயல்படுவது நிதர்சனமான உண்மை' என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், 'தற்போதைய தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவோம் என்று சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டார்களா?. 'நீட்' பிரச்சினையில் நாங்கள் செய்ததைத்தானே தி.மு.க.வினரும் செய்துள்ளார்கள் என்றும், அன்று 'கோ பேக்' மோடி என்றவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள் என்றும், இந்த காரியங்களை தி.மு.க. செய்தால் அது 'திராவிட மாடல்' என்று பாராட்டுவதும், அ.தி.மு.க. செய்தால் அடிமைத்தனம்? என்று ஊடகங்கள் முதல் அனைவரும் விமர்சிப்பதைத்தான் தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் இது வருத்தம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.


Next Story