டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது..? அதிகாரிகள் தகவல்


டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது..? அதிகாரிகள் தகவல்
x

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

சென்னை,

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மே மாதம் குரூப் 2 தேர்வும், ஜூலை மாதம் குரூப் 4 தேர்வுக் நடத்தியது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியாக இருந்தது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு, மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது. அதில், மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்றவேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ஏற்கெனவே மகளிருக்கான இட ஒதுக்கீட்டுக்கீட்டில் நடைமுறையில் இருந்த செங்குத்து நகர்வுக்கு பதில் கிடைமட்ட நகர்வு முறை பின்பற்றவேன்றும் என்றும், ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது.

புதிய நடைமுறையின் படி தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் ஆனதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்று பணிநியமன் ஆணைகள் வழங்கப்படுன் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story