ஏற்காட்டில் வெளுத்து வாங்கிய மழை


ஏற்காட்டில் வெளுத்து வாங்கிய மழை
x
தினத்தந்தி 6 Sept 2022 1:30 AM IST (Updated: 6 Sept 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கன்னங்குறிச்சியில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. ஏற்காட்டில் 7 சென்டி மீட்டர் மழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 70 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சேலம்

சேலம் கன்னங்குறிச்சியில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. ஏற்காட்டில் 7 சென்டி மீட்டர் மழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 70 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பலத்த மழை

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகலில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது.

இதனால் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், பெரமனூர், 3 ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வழக்கமாக அங்கு நடைபயிற்சிக்கு செல்பவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்

இதேபோன்று சேலம் மூக்கனேரி பகுதியில் நேற்று மழை பெய்தது. இதனால் மூக்கனேரி ஏரி நிரம்பி அதில் இருந்து உபரி நீர் வெளியேறுகிறது. இதனால் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள சரஸ்வதி நகர், கோகுல்நகர், பிரகாஷ் நகர் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. அதே போன்று அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது.

குறிப்பாக சாமந்தி, ரோஜா போன்ற பூக்கள் பயிரிடப்பட்டு உள்ள நிலங்களில் அதிகம் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர்.

பதிவாகி உள்ளது

அதேபோன்று பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று முன்தினம் 3 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அதிகப்பட்சமாக ஏற்காட்டில் 7.2 சென்டி மீட்டர் (70.2 மில்லி மீட்டர்) மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஓமலூர்-63, சேலம்-48.8, சங்ககிரி-47.3, காடையாம்பட்டி-20, எடப்பாடி-15, பெத்தநாயக்கன்பாளையம்-5, மேட்டூர்-3.2, தம்மம்பட்டி-2, அணைமேடு-1.


Related Tags :
Next Story