'அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களை வெளியிடாதது ஏன்?' - சீமான் கேள்வி


அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களை வெளியிடாதது ஏன்? - சீமான் கேள்வி
x

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் உள்ளிட்ட விவரங்களை மக்களிடம் தெரிவிக்காதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

குமரி,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வின் தோல்விக்கு முக்கிய காரணம் 40 சதவீத கமிஷன் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தான். எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ததற்கான காரணம் அவர் மீது வந்த ஊழல் குற்றச்சாட்டு தான்.

செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் உள்ளிட்டவற்றின் விவரங்களை மக்களிடம் தெரிவிக்காதது ஏன்? முறைகேடுகள் தொடர்பான விவரங்கள் எந்த வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனையிலாவது சொல்லப்பட்டுள்ளதா?" என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
Next Story