ஓரிரு நாளில் முக்கிய புள்ளிகள் பா.ஜ.க.வில் இணைவார்கள்-அண்ணாமலை பரபரப்பு பேட்டி
தமிழகத்தில் பாஜகவின் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு கடன் சுமையில் இருக்கிறது என்பதையே தமிழக அரசின் பட்ஜெட் உணர்த்துகிறது. தமிழகத்தில் மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் நினைக்கிறார்கள். பாஜகவில் இருக்கக்கூடிய கூட்டணி வலிமையான கூட்டணியாக இருக்கும். தமிழகத்தில் பாஜகவின் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது. ஆனால், இணைவதும், இணையாமல் செல்வதும் அந்தந்த கட்சியின் விருப்பம்.
2024 தேர்தலில் தமிழகத்தில் பிரதான கட்சிகள் 3 மற்றும் 4-ம் இடத்திற்கு சென்றுவிடும். தமிழ்நாட்டில் மக்கள் அதிகாரம் கொடுத்துள்ள முக்கிய புள்ளிகள் ஓரிரு நாட்களில் பாஜகவில் இணைய உள்ளார்கள். எனவே, அனைவரையும் நாங்கள் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்கிறோம்"இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story