வேரழுகல் நோயால் விளைச்சல் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காய பயிருக்கு நிவாரணம் கிடைக்குமா?


வேரழுகல் நோயால் விளைச்சல் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காய பயிருக்கு நிவாரணம் கிடைக்குமா?
x

வேரழுகல் நோயால் விளைச்சல் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காய பயிருக்கு நிவாரணம் கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

பெரம்பலூர்

சின்ன வெங்காயம் சாகுபடி

இல்லத்தரசிகளின் சமையலில் முக்கிய உணவு பொருளாக சின்ன வெங்காயம் பங்கு வகிக்கிறது. அத்தகைய சின்ன வெங்காயம் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காய உற்பத்தியில் தமிழகத்தில் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகித்து வருகிறது. இந்த ஆண்டும் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர்.

வேரழுகல் நோய்

ஆனால் இந்த ஆண்டும் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தில் வேரழுகல் நோய் தாக்குதலினால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை இருக்கும்போது, அவற்றை வேரழுகல் நோய் தாக்கி வருவதால் விவசாயிகளுக்கு லாபம் இல்லாமல் போய்விடுகிறது.

பல்வேறு இடையூறுகளை சந்தித்து...

இதுகுறித்து ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் கூறுகையில், இந்த ஆண்டு விதை வெங்காயம் விலையேற்றம், ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, மருந்து, உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு இடையூறுகளை விவசாயிகள் சந்தித்து சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்தனர். வயல்களில் தற்போது சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலையும் இருந்து வந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் அவ்வப்போது பெய்த பலத்த மழையினால் வயலில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்க தொடங்கியதால் சின்ன வெங்காயத்தை வேரழுகல் நோய் தாக்கி வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளிடம் இருந்து சின்ன வெங்காயத்தை குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். எனவே வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காய பயிர்களை மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து அந்த விவசாயிகளுக்கு அரசின் நிவாரண தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


Next Story